திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Modified: வியாழன், 28 நவம்பர் 2019 (18:22 IST)

துப்புறவு பணிக்கு நேர்காணல்... குவிந்த 'என்ஜினியரிங் பட்டதாரி இளைஞர்கள்'...

கோவை மாநகராட்சியில் காலியாக உள்ள துப்புறவுப் பணியாளர் வேலைக்கு, பல நூற்றுக் கணக்கான, என்ஜினியரிங் இளைஞர்கள் நேகாணலில் பங்கேற்றுள்ளனர்.
கோவை மாநகராட்சியில் காலியாக உள்ள 549 நிரந்தர துப்புறவு பணியாளர்கள் வேலைக்கான நேர்காணல், இன்று, மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
 
இந்தப் பணிக்கு கல்வித் தகுதியாக எழுதப் படிக்கத் தெரிந்ததாலே வேண்டும் என்பதால் , இந்த நேர்காணலில், டிப்ளமோ படித்தவர்கள், பட்டப்படிப்பு முடித்தவர்கள், என்ஜினியரிங் படிப்பு முடித்தவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
 
அதாவது, குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலையால் பல இளைஞர்கள்  பணி கிடைத்தால் போதும் என்ற நிலையில் விண்ணப்பித்ததாக பலர் தெரிவித்துள்ளனர்.