வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Updated : செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (15:25 IST)

முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் சர்வதேச யானைகள் தினத்தை முன்னிட்டு சர்வதேச யானைகள் தினம் விமர்சியாக கொண்டாடப்பட்டது....

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12ஆம் தேதி சர்வதேச யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது இந்நிலையில் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் சர்வதேச யானைகள் தினம் கொண்டாடப்பட்டது.
 
இதில் அங்கு வளர்க்கப்படும் பயிற்சி பெற்ற யானைகள் பாகன்ள் சொல்லிக் கொடுத்தவை எல்லாம் தத்ரூபமாக செய்து காட்டியது பின்பு வளர்ப்பு யானைகளுக்கு பிடித்த உணவுகள் மற்றும் கரும்பு தர்பூசணி ஆப்பிள் வாழைப்பழம் போன்ற பழ வகைகள் வளர்ப்பு யானைகளுக்கு வழங்கப்பட்டது.
 
நிகழ்ச்சியில் முதுமலை கள இயக்குனர் வெங்கடேஷ் மற்றும் இணை இயக்குனர் வித்யா மற்றும் வனத்துறை அதிகாரிகள் பலரும் இருந்தனர் இந்நிகழ்ச்சியினை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்