புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 25 பிப்ரவரி 2021 (18:30 IST)

பிளஸ் 2 பொதுத்தேர்வு: தனித்தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

பிளஸ் 2 பொதுத்தேர்வு: தனித்தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மே மாதம் 3ஆம் தேதி தொடங்கி மே 21-ம் தேதி முடிவடையும் என பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் அறிவித்தது என்பது தெரிந்ததே. மேலும் பிளஸ் டூ பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதுமட்டுமின்றி 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை என்றும் தேர்வு என்று அனைத்து மாணவர்களும் பாஸ் என்றும் இன்று அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இதனிடையில் தற்போது பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
 
வரும் மே மாதம் 3ஆம் தேதி தொடங்கும் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் நாளை முதல் அதாவது பிப்ரவரி 26 முதல் மார்ச் 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது