வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 30 மார்ச் 2022 (14:44 IST)

இந்தியாவின் முதல் சிசு சிறப்பு திட்டம்: முதல்வர் திறந்து வைத்தார்!

இந்தியாவின் முதல் சிசு சிறப்பு திட்டம்: முதல்வர் திறந்து வைத்தார்!
இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு மருத்துவமனைகளில் சிசுவின் குறைபாடுகளை கண்டறிவதற்கான புதிய பரிசோதனை திட்டத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார் 
 
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இந்தியாவிலேயே அரசு மருத்துவமனையில் முதல்முறையாக சிசுவின் குறைபாடுகளை கருவிலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சைகள் அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது 
 
இந்த திட்டத்தின் மூலம் கருவுற்ற மூன்று மாதத்திற்குள் குழந்தையின் உடல் குறைபாடுகளை கண்டறிந்து அதனை சரிசெய்வதற்கான சிகிச்சைகளை வழங்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது