செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 8 செப்டம்பர் 2024 (12:46 IST)

மத்திய வங்கக்கடலில் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த 24 மணி நேரத்தில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் வட மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.

இந்த நிலையில் ஆந்திராவின் கிழக்கு பகுதியில் சுமார் 310 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மையம் இருப்பதாகவும், இது வடமேற்கு திசையில் நகர்ந்து ஓடிஸா மட்டும் மேற்குவங்க கடற்கரையை நோக்கி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

அதன் பின்னர் வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் வழியாக மேற்கு, வடமேற்கு நோக்கி நகரும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by Siva