1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 12 டிசம்பர் 2017 (10:29 IST)

விவசாயிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திய தஞ்சாவூர் இந்தியன் வங்கி

வங்கிகள் பல, விவசாயிகள் பெற்ற கடனிற்காக அவர்களை தொடர்ந்து தொந்தரவு செய்து கொடுத்த கடனை வசூல் செய்வார்கள். ஆனால் தஞ்சாவூர் இந்தியன் வங்கி இதற்கு நேர்மாராக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இது விவசாயிகள் பலரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நம் நாட்டின் முதுகெலும்பே விவசாயிகள் தான். ஆனால் அவர்கள் படும் கஷ்டத்தை சொல்லி மாளாது. கஷ்டப்பட்டு வட்டிக்கு பணத்தை வாங்கி விவசாயம் செய்யும் விவசாயிகளை பல நேரம் பருவமழை பழிவாங்கி விடும். இதில் யானைகளின் அட்டகாசங்களும் அடங்கும். இதனால் நஷ்டமடைந்து வாங்கிய கடனை அடைக்க முடியாமல் விவசாயிகள் பலர் தவித்து வருகின்றனர். குறிப்பாக வங்கியில் வாங்கிய கடனை வசூல் செய்வதற்கு சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் விவசாயிகளை கேவலப்படுத்தியும் மிரட்டியும் பணத்தை வசூல் செய்வார்கள். இதனால் விவசாயிகள் தற்கொலை செய்யும் முடிவிற்கு தள்ளப்பட்டார்கள்.
 
எனவே விவசாயிகளின் கஷ்டத்தை போக்க தஞ்சாவூரில் நடைபெற்ற இந்தியன் வங்கி மாநாட்டில், விவசாயிகள் மிகவும் நெருக்கடியான பொருளாதார சூழலில் இருப்பதால், வங்கிகள் கடன் வசூலில் கெடுபிடிகளை தளர்த்தி கொள்ள வேண்டுமென்றும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்கள் வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
 
மத்திய மாநில அரசு ஏமாற்றிவிட்ட நிலையில் இந்தியன் வங்கியின் இந்த முடிவு எங்களை ஆச்சரியத்திலும் சந்தோஷத்திலும் ஆழ்த்தியிருக்கிறது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.