ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 27 டிசம்பர் 2017 (18:40 IST)

சசிகலா குடும்பத்தை குறிவைத்து மீண்டும் வருமான வரித்துறை சோதனை!

கடந்த நவம்பர் மாதம் சசிகலா குடும்பத்தை குறிவைத்து நாட்டிலேயே மிகப்பெரிய வருமான வரித்துறை சோதனையை நடத்தினார்கள். இந்நிலையில் தற்போதும் சசிகலா குடும்பத்தை குறிவைத்து வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சசிகலா குடும்பத்தினர் அதிரடியாக நேரடி அரசியலில் இறங்கினர். இதனையடுத்து வருமான வரித்துறையினர் சசிகலா குடும்பத்தினரை சுற்றி சுற்றி ரெய்டு நடத்தி வருகின்றனர்.
 
கடந்த ஏப்ரல் மாதம் ஆர்கே நகர் இடைத்தேர்தல் தேர்தலின் போது ரெய்டு நடத்திய வருமான வரித்துறை கடந்த நவம்பர் மாதம் சசிகலா குடும்பத்தையும், அவர்கள் தொடர்புடையவர்கள் வீடுகள், அலுவலகங்களிலும் நாட்டிலேயே மிகப்பெரிய வருமான வரித்துறை சோதனையை நடத்தினர்.
 
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். இதனையடுத்து தற்போது சசிகலாவின் உறவினரான இளவரசியின் இரண்டு மகன்களில் ஒருவரான கார்த்திகேயனின் வீடு உள்ளிட்ட ஆறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
 
அதே போல சசிகலா குடும்பத்துக்கு சொந்தமான மிடாஸ் நிறுவனத்துக்கு அட்டை பெட்டிகள் செய்து தரும் சாய் கார்ட்டன்ஸ் என்ற நிறுவனத்திலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.