1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 3 டிசம்பர் 2021 (08:42 IST)

சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் 3வது நாளாக வருமானவரி சோதனை!

சென்னை மற்றும் கோவையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் நேற்று முன்தினம் தொடங்கிய வருமான வரி சோதனை இன்று 3வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
சென்னையிலுள்ள பிரபல ஜவுளி மற்றும் நகைக்கடைகளான சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் நேற்று முன்தினம் திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்
 
இந்த சோதனை நேற்று 2-வது நாளாக நீடித்த நிலையில் இன்று 3வது நாளாக நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை புரசைவாக்கம், தியாகராய நகர், குரோம்பேட்டை, ஆகிய பகுதிகளில் உள்ள சரவணா ஸ்டோர் கடைகள் மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது
 
அதேபோல் கோவை ஒப்பணக்கார வீதி யில் உள்ள சரவணா ஸ்டோர் கடைகளிலும் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சோதனையின் முடிவில் தான் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்பது குறித்த தகவல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.