1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (08:48 IST)

விஜயகுமாருக்கு நோட்டீஸ் அனுப்பிய வருமான வரித்துறை: ரத்து செய்த நீதிமன்றம்!

சந்தன கடத்தல் வீரப்பனை பிடித்த ஐபிஎஸ் அதிகாரிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளதை அடுத்து அந்த நோட்டீசை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த சந்தன கடத்தல் வீரப்பனை, ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் தலைமையிலான படை பிடித்தது.
 
இந்த செயலுக்கு பாராட்டு தெரிவித்து விஜயகுமார் உட்பட அந்த குழுவில் உள்ள அனைவருக்கும் இலவச மனைகள் தமிழக அரசால் வழங்கப்பட்டது. இந்த நிலையில் விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட மனையை விற்பனை செய்ததாக தெரிகிறது. அந்த தொகைக்கு வருமான வரி கட்ட வேண்டும் என்று வருமான வரித்துறை சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பியது
 
இதுகுறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்று நேற்று விசாரணைக்கு வந்தபோது வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது