வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2019 (18:07 IST)

சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அத்துமீறிய கொடூரன் !

விழுப்புரம் மாவட்டம் சங்காபுரம் அருகே ஒரு சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகேயுள்ள திம்மனந்தல் கிராமத்தில் வசிப்பவர் கதிரவன். இவர் அங்குள்ள பகுதியில் நெல் அறுவை இயந்திர ஓட்டுனராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்த 7 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, அவரை தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. 
 
இதுகுறித்து சிறுமி தன் தாயிடம் அழுதுகொண்டே நடந்ததை கூறியுள்ளார். பின்னர் சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கதிரவனை கைது செய்து சிறையில் அடைந்தனர். இந்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.