செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (15:53 IST)

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் கோடை காலத்தில் பலத்த வறட்சி நிலவியது.இதனால், சென்னை மாநகரத்தில் ’டே ஜீரொ-’ (தண்ணிர் இல்லாத நாள்) ஆக மாற வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. அதனால் சென்னையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க வேலூர், ஜோலார் பேட்டையில் இருந்து தினமும் 74 லட்சம் லிட்டர் சென்னைக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துவருகிறது.
இதனைத்தொடர்ந்து, தமிழகத்தில், தென்மேற்கு பருவ மழை பொய்த்தது. ஆனால் சில இடங்களில் மழை பெய்து ஆறுதல் தந்தது.
 
இந்தநிலையில் , இன்று, சென்னை மண்டல் வானிலை ஆய்வுமையம், தமிழகத்தின் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்து, சென்னை மண்டல ஆய்வு மையம் கூறியுள்ளதாவது :
 
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் விழுப்புரம், மதுரை, அரியலூர், கடலூர், பெரம்பலூர் போன்ற இடங்களில் இடியுடன் மழைபெய்ய வாய்ப்பு உள்ளது.
 
மேலும், கடந்த 24 மணிநேரத்தில், நீலகிரி மாவட்டத்திலுள்ள தேவாலா, பள்ளிப்பட்டு, திருவள்ளூர், மற்றும் ஆர் கே பேட்டை ஆகிய இடங்களில் 7 செண்டி மீ. மழையும், அடுத்ததாக,நீலகிரியிலுள்ள கூடலூர், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில்  6 சென்டி மீ., மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. சமீப காலமாக வெய்யில் தாக்கம் அதிகம் இருந்ததால், வானிலை ஆய்வு மையத்தின் இந்த அறிவிப்பு மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.