மொழிபெயர்ப்பில் தவறு நடந்தது உண்மைதான். இல.கணேசன்
சமீபத்தில் சென்னை வந்திருந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, பாஜக தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் அதே நேரத்தில் அமித்ஷாவின் பேச்சை மொழிபெயர்த்த எச்.ராஜா, சொட்டுநீர் பாசனம் என்று கூறுவதற்கு பதிலாக சிறுநீர் பாசனம் என்று மொழி பெயர்த்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு இணையதளத்தில் வைரலாக்கினர். இந்த நிலையில் அமித்ஷா பேச்சு மொழிபெயர்ப்பில் சிறு தவறு நடந்திருக்கிறது என்று இல.கணேசன் கூறியுள்ளார்.
ஆனால் அதே நேரத்தில் சிறுநீர் விவகாரம் குறித்து எச்.ராஜா மொழிபெயர்த்ததை கூறாமல் ஊழல் அரசு குறித்து அமித்ஷா பேசியது குறித்து மட்டும் அவர் கூறியுள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது, 'தமிழக அரசை ஊழல் அரசு என சொல்லவில்லை, ஒட்டுமொத்த தமிழகமும் ஊழலில் சிக்கியுள்ளதாகவும் இதைத்தான் மாற்ற நினைப்பதாகவும் அமித்ஷா கூறியதாக இல.கணேசன் கூறியுள்ளார்.