1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 17 ஜனவரி 2017 (16:17 IST)

ஜல்லிக்கட்டு நடத்தாவிட்டால் குடியரசு தினம் கருப்பு தினமாக அனுசரிக்கப்படும்

சென்னை மெரீனா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தும் மாணவர்கள், ஜல்லிக்கட்டு நடத்தாவிட்டால் குடியரசு தினம் கருப்பு தினமாக அனுசரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.


 

 
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கைதுச் செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக ஜல்லிக்கட்டு ஆர்வளர்கள் மற்றும் மாணவர்கள் சேலம், மெரீனா கடற்கரை ஆகிய இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 
 
இந்நிலையில் மெரீனாவில் நடக்கும் ஜல்லிக்காட்டுக்காக நடக்கும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க சென்ற திமுக செயல் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை மாணவர்கள் தடுத்து நிறுத்தி அவருக்கு எதிராக கோசங்கள் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
அதைத்தொடர்ந்து ஜல்லிக்கடு நடத்தாவிட்டால், குடியரசு தினம கருப்பு தினமாக அனுசரிக்கப்படும் என்று மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்திய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.