திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 27 அக்டோபர் 2022 (17:02 IST)

Ride-ஐ ஓட்டுநர்கள் ரத்து செய்தால் ₹ 500 அபராதம்: தமிழக அரசு அதிரடி

uber ola
ஆன்லைன் மூலம் புக் செய்யப்படும் டாக்ஸி ஓட்டுநர்கள் ரைடை கேன்சல் செய்தால் 50 முதல் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசின் போக்குவரத்துத் துறை அதிரடியாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழகத்தில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படும் டாக்ஸி ஆட்டோ பயணங்களில் சிலசமயம் ஓட்டுனர்கள் ரத்து செய்து விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனால் வாடிக்கையாளர்கள் பணம் கட்டியும் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் ஆன்லைன் மூலம் புக் செய்யப்படும் டாக்சி, ஆட்டோ பயணங்களை ஓட்டுநர்கள் ரத்து செய்தால் 50 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது 
 
பயணத்திற்காக ஆப் மூலம் ஆன்லைனில் பணம் செலுத்திய பின்னர் ஓட்டுநர்கள் முன்பதிவை கேன்சல் செய்து விடுவதாக எழுந்த புகாரை அடுத்து போக்குவரத்து காவல்துறை இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran