தொடர்புடைய செய்திகள்
- மோடி தோற்கடிக்கப்பட வேண்டும், ஆனால் பிரச்சாரத்திற்கு கூப்பிட்டால் செல்வேன்: சுப்ரமணியசாமி
- 6 மாநிலங்களில் போட்டி! தேசிய அளவில் களமிறங்கும் வி.சி.க! – திருமாவளவன் கொடுத்த அப்டேட்!
- வாரிசு அரசியலில் இறங்கிய நாம் தமிழர்? மகனுக்கு தேர்தலில் சீட் ஒதுக்கிய சீமான்!
- ஒரே நாளில் 33 அதிமுக வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல்.. ஈபிஎஸ் திட்டம் என்ன?
- கடும் எதிர்ப்பையும் மீறி கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் கிடைத்தது எப்படி? பலமான சிபாரிசு காரணமா?
’என் மகனுக்கு சீட்’ என சீமான் கூறியது குறித்து இடும்பாவனம் கார்த்திக் விளக்கம்!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த போது அடுத்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் இளைஞரை களம் இறக்க போகிறேன் என்றும் நான் ஒருவன் தான் அந்த கூட்டத்தில் மூத்தவனாக இருப்பேன் என்றும் தெரிவித்தார்
மேலும் மூத்த மகனுக்கு அடுத்த முறை தேர்தலில் நிற்க சீட் தரப் போகிறேன் என்றும் அவனும் சரி என்று சொல்லி விட்டான் என்று சீமான் கூறியதாக ஊடகங்களின் செய்தி வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள சீமான் கட்சியின் நிர்வாகிகளில் ஒருவரான இடும்பாவனம் கார்த்திக் சீமான் மேடையில் என் மகன் என்று கூறியது அவருடைய மகனை அல்ல, ஹிமாயின் மகன் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். ஆனால் ஊடகங்கள் மொட்டையாக எனது பெரிய மகன் என்று செய்தியாக திரித்து எழுதி உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் 2026 தேர்தலில் 117 பெண்கள் மற்றும் 117 ஆண்களை களத்தில் இறக்க போவதாகவும், அதில் என்னை தவிர எல்லோருமே இளைஞர்கள் என்று சீமான் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
