திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 27 மே 2025 (14:20 IST)

ஈபிஎஸ்க்கு எல்லாம் பதில் சொல்லி என் தரத்தை தாழ்த்தி கொள்ள விரும்பவில்லை: முதல்வர் ஸ்டாலின்

Stalin
சென்னை கொளத்தூரில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எல்லாம் பதில் சொல்லி என் தரத்தை தாழ்த்தி கொள்ள விரும்பவில்லை என்று கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
 
"எடப்பாடி பழனிசாமி பேசுவதை பாருங்கள். அதிமுக ஆட்சி போன பிறகு இன்னும் எதையாவது பிடித்துப் பேச வேண்டி, பழைய விஷயங்களையே சுத்தி சுத்தி சொல்லிக்கொண்டிருக்கிறார். அவரைப் பற்றி பேசினால் நம்முடைய மரியாதையைவே இழக்க நேரிடும். அதனால் அவருக்கு பதில் சொல்லும் எண்ணமே எனக்கு இல்லை," என்றார்.
 
மேலும், “நான் வெள்ளைக் கொடியோ, காவிக் கொடியோ எடுத்துக்கொண்டு டெல்லி போனதில்லை. நம் கொள்கையும் பண்பும் ஒன்றே. அதிமுக ஆட்சியில்தான் சாத்தான்குளம், தூத்துக்குடி போன்ற பல கொடூரங்கள் நடந்தன. இப்போ அது பற்றி பேசாமல் வீண் பழி போடுகிற அளவுக்கு எடப்பாடி பேசுகிறார்,” எனவும் அவர் கூறினார்.
 
இந்த நிகழ்வில் முதியோர் இல்லம், மூத்த குடிமக்களுக்கு சிறப்பு தங்குமிடம், மாணவர்களுக்கு பரிசளிப்பு போன்ற திட்டங்களையும் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
 
Edited by Mahendran