நான் என்ன கேர் ஆஃப் பிளாட்பாரமா? டிஎஸ்பியிடம் சீறிய ஸ்டாலின்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி திமுக பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நடைப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணம் நேற்று கடலூரில் முடிவடைந்த நிலையில் கடலூரில் நடைபெற்ற பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசினார்
அப்போது, இந்த நடைப்பயணத்தை தடுத்த நிறுத்த தன்னிடம் டிஎஸ்பி ஒருவர் சம்மன் கொடுக்க வந்ததாகவும், அவரிடம் தான், 'நான் ஒன்னும் கேர் ஆஃப் பிளாட்ப்ராம் இல்லை. ஏன் நடுரோட்டில் சம்மனை கொடுக்கின்றீர்கள், எனக்கு வீடு என்று ஒன்று உள்ளது. அங்கு வந்து கொடுங்கள்' என்று கூறி அனுப்பிவிட்டதாகவும் ஸ்டாலின் கூறினார்.
மேலும் இந்த நடைப்பயணத்தின்போது காவிரி மேலாண்மை வாரியம் குறித்து எங்களைவிட பொதுமக்கள் நல்ல விழிப்புணர்ச்சியுடன் இருக்கின்றார்கள் என்றும் மேலாண்மை வாரியம் அமைக்காமல் பிரதமர் உள்பட பாஜகவினர் யாரும் தமிழகத்திற்குள் வரமுடியாது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.