1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: சனி, 27 செப்டம்பர் 2025 (23:39 IST)

இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்! தவெக விஜய்யின் இரங்கல் பதிவு!

TVK Vijay

கரூரில் நடந்த கூட்ட நெரிசல் மரணத்தை தொடர்ந்து திருச்சி வழியாக சென்னைக்கு சென்ற விஜய் தற்போது இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார்.

 

எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தவெக தலைவர் விஜய் “இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். 

 

கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K