வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 20 அக்டோபர் 2021 (09:31 IST)

மனைவிக்கு மேட்ரிமோனியலில் மாப்பிள்ளை பார்த்த கணவர்!

மனைவிக்கு மேட்ரிமோனியில் மாப்பிள்ளை பார்த்த கணவர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
திருவள்ளூரை சேர்ந்த ஓம் குமார் என்பவருக்கும் ஜான்சி என்பவருக்கும் கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின்னர் அமெரிக்கா சென்ற இந்த தம்பதிக்கு குழந்தை பிறந்தது
 
இந்த நிலையில் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இந்தியா திரும்பிய ஓம்குமார் ஜான்சியை விவாகரத்து செய்ய முடிவு செய்தார். விவாகரத்து கிடைக்க தாமதம் ஆனதை அடுத்து அவர் மனைவிக்கு மாப்பிள்ளை தேடி மேட்ரிமோனியில் இணையதளத்தில் விளம்பரம் செய்தார்
 
இது குறித்து அறிந்த ஜான்சியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் செய்ததை அடுத்து ஓம் குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கட்டிய மனைவிக்கு மாப்பிள்ளை தேடி மேட்ரிமோனியல் இணையதளத்தில் விளம்பரம் கொடுத்த கணவரால் திருவள்ளூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது