வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 29 நவம்பர் 2024 (14:36 IST)

மருத்துவமனைக்குள் நுழைந்து பெண் டாக்டர் மீது தாக்குதல் நடத்தியவர் கைது: குடும்ப சண்டையா?

doctors
தூத்துக்குடியில், மருத்துவமனைக்குள் நுழைந்து பெண் டாக்டர் மீது தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டார். அந்த நபர் டாக்டரின் கணவர் என கூறப்படுவதால், இது குடும்ப சண்டையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தூத்துக்குடி சேர்ந்த ரேவதி என்ற டாக்டர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். ரேவதி, டேனியல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ரேவதி தனியாக வாழ்ந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

நேற்று இரவு, ரேவதி பணியாற்றிக் கொண்டிருந்தபோது, டேனியல் திடீரென மருத்துவமனைக்குள் நுழைந்தார். அவர் ரேவதியை தன்னுடன் வருமாறு அழைத்தார். ஆனால், ரேவதி மறுத்ததையடுத்து, டேனியல் அவரை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, டாக்டர் ரேவதி அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் டேனியலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். மருத்துவமனைக்குள் நுழைந்து டாக்டரை தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Siva