1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 25 ஆகஸ்ட் 2021 (13:43 IST)

தடுப்பூசி செலுத்தியதால் விவேக் மரணமா? – விசாரிக்கும் மனித உரிமைகள் ஆணையம்!

நடிகர் விவேக் மரணம் தொடர்பாக சந்தேகம் எழுப்பி தொடரப்பட்ட வழக்கை ஏற்றுள்ளது மனித உரிமைகள் ஆணையம்.

தமிழ் நகைச்சுவை நடிகரான விவேக் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல்நல குறைவால் காலமானார். அவர் இறப்பதற்கு சில நாட்கள் முன்னதாக கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்த நிலையில் அவரது இறப்புக்கு தடுப்பூசி காரணமா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் விழுப்புரத்தை சேர்ந்த சரவணன் என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில் நடிகர் விவேக் தடுப்பூசி செலுத்தியதால் இறந்தாரா என்பதை தெளிவுப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். அவரது இந்த வழக்கை மனித உரிமைகள் ஆணையம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. இதனால் விவேக் மரணம் குறித்த தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.