செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (18:17 IST)

வரிக்கு வட்டி விவகாரம்: மேல்முறையீடு செய்யும் சூர்யா!

சூர்யா கட்ட வேண்டிய வரிக்கு வரி விலக்கு வேண்டும் என்று அவர் தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்த பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து சூர்யா மேல்முறையீடு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது
 
கடந்த 2018 ஆம் ஆண்டில் சூர்யா வீட்டில் நடந்த வருமான வரி சோதனையில் இரண்டு ஆண்டுகளுக்கான வருமான வரி மாற்றம் செய்யப்பட்டு அந்த வரியை கட்ட வேண்டும் என வருமான வரித் துறை உத்தரவிட்டது 
 
இதுகுறித்து சூர்யா மேல்முறையீடு செய்த நிலையில் மூன்று ஆண்டுகள் கால தாமதமாகி தீர்ப்பாயமும் வரியை உறுதி செய்தது. இந்த நிலையில் காலதாமதமான மூன்று ஆண்டுகளுக்கு விதிக்கப்பட்ட ஒரு சதவீத வட்டிக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்று சூர்யா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
 
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் சூர்யாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது இந்த நிலையில் சூர்யா தனது மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் நீதிமன்ற தீர்ப்பின் நகல் கிடைத்தவுடன் அவர் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது