18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் தேதி அறிவிப்பு.. சபாநாயகர் யார்?
18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் வருகிற 24ஆம் தேதி கூடுகிறது என்றும் இந்த கூட்டம் வருகிற 24ஆம் தேதி முதல் ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கூட்டத்தொடரில் மக்களவை சபாநாயகர் தேர்வு, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்கள் பதவி ஏற்பு உள்ளிட்டவை நடைபெற உள்ளது என கூறப்படுகிறது.
சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியவில்லை என்றாலும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஆட்சி அமைந்துள்ளது என்பதும் சமீபத்தில் பிரதமர் மோடி மற்றும் 72 அமைச்சர்கள் பதவியேற்றார்கள் என்பதையும் பார்த்தோம்.
பத்து ஆண்டுக்கு பிறகு மீண்டும் மத்தியில் கூட்டணி ஆட்சியை ஏற்பட்டுள்ளதை அடுத்து கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சர்கள் பதவி பகிர்ந்து அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 18 வது மக்களவை ஜூன் 24ஆம் தேதி கூட இருப்பதாகவும் அப்போது சபாநாயகர் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் பதவியேற்பு ஆகியவை நடைபெறும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் சபாநாயகர் பதவியை தெலுங்கு தேசம் கட்சி மற்றும் பிஜு ஜனதாதளம் கட்சி கேட்டு வரும் நிலையில் பாரதிய ஜனதா கட்சி தனக்கே அந்த பதவியை வைத்துக் கொள்ளுமா அல்லது கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Edited by Mahendran