குழந்தைகளை நான் வளர்த்திருப்பேனே... கண்ணீர் சிந்தும் ஹவுஸ் ஓனர்

baby
Last Updated: செவ்வாய், 4 செப்டம்பர் 2018 (21:02 IST)
குன்றத்தூரில் கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக அபிராமி தனது குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் தமிழகமெங்கும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 
 
போலீஸார் அபிராமியையும் அவரது கள்ளக்காதலனான பிரியாணிக்கடை ஊழியர் சுந்தரத்தையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் இவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என தெரிகிறது. 
 
இந்நிலையில், அபிராமி தங்கியிருந்த வீட்டின் ஹவுஸ் ஓனர் கண்ணீர் மல்க பின்வருமாறு பேட்டி அளித்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளாக எங்கள் வீட்டில் விஜய் மற்றும் அபிராமி குடியிருந்து வந்தனர். அவர்களது மகன் அஜய் மூன்று மாத கைக்குழந்தையாக இருந்த போது, எங்கள் வீட்டிற்கு வந்தனர்.
 
எப்பொழுதும் அபிராமியின் இரண்டு குழந்தைகளும் எங்களது வீட்டிலேதான் இருப்பார்கள். எங்களது சொந்த குழந்தைகள் போல் அவர்களை பார்த்து வந்தோம். 
 
குழந்தைகளை கொலை செய்யும் அளவுக்கு அவளுக்கு எப்படித்தான் மனசு வந்ததோ தெரியவில்லை. குழந்தைகளை எங்களிடம் கொடுத்திருந்தால் நாங்கள் நல்ல முறையில் வளர்த்திருப்போம் என கூறியுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :