1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 4 ஏப்ரல் 2022 (09:35 IST)

அடுத்த விலை உயர்வு: ஓட்டல்களில் உணவு பொருட்கள் விலை உயர்த்த முடிவு!

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, சமையல் எண்ணெய், வாகன பதிவு கட்டணம், டோல்கேட் கட்டணம், தங்கம் உள்பட பல பொருட்களின் விலை உயர்ந்து கொண்டு வரும் நிலையில் தற்போது அடுத்ததாக ஹோட்டல்களில் உணவுப் பொருள்களின் விலையும் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன 
 
வர்த்தக பயன்பாட்டிற்கான கேஸ் விலை,  பருப்பு விலை, சமையல் எண்ணெய் விலை ஏற்றம் காரணமாக ஓட்டல்களுக்கு உணவுப் பொருட்களை தயாரிக்க அதிகமாக செலவு ஆவதாக  ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர் 
 
இதன் காரணமாக ஓட்டல்களில் இட்லி தோசை உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை 20 சதவீதம் உயர்த்த ஹோட்டல் உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர். அதேபோல் பிரியாணி உள்பட மற்ற உணவுப் பொருட்கள், டீ, காபி விலையை உயர்த்த ஹோட்டல் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது