தொடர்புடைய செய்திகள்
- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி!
- கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு தனி வழி! – ஆட்சியர்களுக்கு புதிய உத்தரவு!
- நடிகர் அஜித் மாஸ்க் அணிந்து மருத்துவமனையில் ... ஏன் தெரியுமா ?
- 17 குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை.... பெற்றோருக்கு அறிவுறுத்திய எம்.பி ரவிக்குமார்
- மாஸ்க் அணிந்து மருத்துவமனை வந்த அஜித்-ஷாலினி: இண்டர்நெட்டில் வீடியோ வைரல்
துணை முதல்வர் ஓபிஎஸ் டிஸ்சார்ஜ் எப்போது? மருத்துவமனை அறிக்கை
தமிழகத்தின் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் இன்று காலை சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இன்று பிற்பகல் 12 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் துணை முதல்வரை சந்தித்து அவரது நலம் குறித்து விசாரித்ததாகவும் செய்திகள் வெளிவந்தது
துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு வழக்கமான பரிசோதனைகளை செய்யப்பட்டுள்ளதாகவும் அவருக்கு உடலில் வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவரது தரப்பினர் கூறினார். இந்த நிலையில் துணை முதல்வர் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது
அந்த அறிக்கையில் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் தங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவருக்கு மாஸ்டர் செக்கப் செய்யப்பட்டதாகவும், பரிசோதனை முடிவுகளை டாக்டர்கள் குழு ஆய்வு செய்ததாகவும், துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது
அடுத்த கட்டுரையில்
