வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (17:48 IST)

நாளை தமிழகம் வருகிறார் அமித்ஷா: கருப்புக்கொடி காட்டப்படுமா?

amithshah
நாளை மத்திய உள்துறை அமைச்சர் தமிழகம் வர இருக்கும் நிலையில் அவருக்கு கருப்புக்கொடி காட்டப்படுமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது 
 
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை புதுவையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னை வரவுள்ளார். சென்னை ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் விருந்தினர் மாளிகையில் நாளை இரவு தங்க உள்ளார் 
 
அதன் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு ஹெலிகாப்டரில் அவர் செல்லவுள்ளார். இந்த நிலையில் நாளை புதுச்சேரி வரும் அமித்ஷாவுக்கு கருப்புக்கொடி காட்ட அம்மாநில எதிர்க்கட்சியினர் திட்டமிட்ட நிலையில் தமிழகத்திலும் கருப்புக் கொடி காட்டப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது