திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (10:44 IST)

நிஜ குதிரைன்னு நம்பி பேருந்தோடு ஓட்டம்! – வைரலாகும் குட்டி குதிரையின் வீடியோ!

horse
கோவையில் பேருந்தில் வரைந்திருக்கும் குதிரை ஓவியத்தின் பின்னாலேயே குட்டி குதிரை ஒன்று ஓடி வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

பல்வேறு சமயங்களில் விலங்குகள் செய்யும் சில சம்பவங்கள் குறும்பு தனமாகவும், அதேசமயம் இரக்கத்தை உண்டு செய்வதாகவும் இருக்கும். இவ்வாறான சம்பவங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாகி வருகின்றன.

தற்போது ஒரு குட்டிக் குதிரையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் காந்திபுரம் செல்லும் தனியார் பேருந்து ஒன்றில் குதிரை ஒன்று ஓடுவது போல ஓவியம் வரையப்பட்டுள்ளது.


அந்த பேருந்து சென்றபோது அதை பார்த்த குட்டிக் குதிரை ஒன்று அதை உண்மையான குதிரை என்றே எண்ணி அந்த பேருந்துடன் ஓட தொடங்கியுள்ளது. நெரிசலான சாலைகளிலும் விடாமல் பேருந்தின் பக்கவாட்டில் குதிரை ஓவியத்துடனே குட்டிக் குதிரை ஓடி வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.