1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 6 டிசம்பர் 2022 (10:12 IST)

அம்பேத்காருக்கு காவி உடை.. இந்து மக்கள் கட்சியின் போஸ்டரால் பரபரப்பு!

ambedkar
அம்பேத்காருக்கு காவி உடை.. இந்து மக்கள் கட்சியின் போஸ்டரால் பரபரப்பு!
அம்பேத்காருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டு நெற்றியில் விபூதி குங்குமம் இடப்பட்ட போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்த நிலையில் அந்த போஸ்டர் உடனடியாக அப்புறப்படுத்த விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இன்று அம்பேத்கார் நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் அவரது போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. 
 
இந்த நிலையில் இந்து மக்கள் கட்சி சார்பாக ஒட்டப்பட்ட அம்பேத்கர் போஸ்டரில் அம்பேத்காருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டு அதனை நெற்றியில் விபூதி குங்குமம் இடப்பட்டிருந்தது
 
இந்த போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த போஸ்டர்கள் உடனடியாக அப்புறப்படுத்த பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இதுகுறித்து காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Siva