வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 8 மே 2022 (12:39 IST)

ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி மட்டுமே அலுவல் மொழி: கனிமொழி கண்டனம்

kanimozhi
ஜிப்மர் மருத்துவமனையில் ஹிந்தி மட்டுமே அலுவல் மொழி என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு கனிமொழி உள்பட பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் 
 
ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி மொழியை கட்டாயமாக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஜிப்ம அலுவலகங்களில் இந்தி மொழி மட்டுமே பயன்படுத்தப்படும் என மருத்துவமனை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள கனிமொழி கூறியிருப்பதாவது:
 
ஒன்றிய அரசுக்கு ஏன் இந்த மொழி வெறி? ஒன்றிய அரசு திணிக்க முயலும் இந்தி வேலையில்லா திண்டாட்டத்தைத் தீர்க்குமா? சமத்துவமின்மை மாறுமா? ஏதேனும் ஒரு சமூகப் பிரச்சனையையாவது திருத்துமா? விரிசல்களை ஆழப்படுத்துவது நல்லதில்லை