1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Modified: வியாழன், 31 மார்ச் 2022 (14:29 IST)

ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் மீதான அவதூறு வழக்கு ரத்து - உயர்நீதிமன்றம் உத்தரவு!

அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் புகழேந்தியை கட்சியிலிருந்து நீக்குவதாக ஜூன் 14ஆம் தேதி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர்.
 
இந்த அறிக்கை தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையும் அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க கோரி புகழேந்தி, சென்னை எம்.பி. எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
 
இதனை எதிர்த்து ஓபிஎஸ், ஈபிஎஸ் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரி ஓபிஎஸ், ஈபிஎஸ் தொடர்ந்த மனுக்கள் மீது உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.