1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 17 ஜனவரி 2021 (17:34 IST)

சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்பும் மக்களால் கடும் போக்குவரத்து நெரிசல்!

பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்பி கொண்டிருப்பதால் மதுராந்தகம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
பொங்கல் விடுமுறை கடந்த 14ஆம் தேதி முதல் ஆரம்பித்த நிலையில் நாளை அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் என்பதால் இன்று பலர் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர் 
 
இதனால் மதுராந்தகம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது, விடுமுறை முடிந்து ஏராளமான மக்கள் ஒரே நேரத்தில் சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்புவதால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மதுராந்தகம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருப்பதாகவும் கிட்டத்தட்ட ஐந்து கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 
 
இந்த நிலையில் போக்குவரத்து போலீசார் வாகனங்களை ஒழுங்குபடுத்தி போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது