திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 6 செப்டம்பர் 2018 (14:00 IST)

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த சில தினங்களுக்கு இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி பேசுகையில் சென்னை  மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்  கூடும் என்றார். புதன்கிழமை பொறுத்தவரை அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் விருத்தாசலம்,  திண்டுக்கல் மாவட்டம் நிலக் கோட்டை ஆகிய இடங்களில் தலா 2 செமீ, வேலூர்,  வாலாஜாபேட்டை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.

அடுத்த 2 தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறினார்.