1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 30 நவம்பர் 2023 (12:07 IST)

மீண்டும் 2015 பெருவெள்ளம் நிலை வருமா? தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன தகவல்

2015 ஆம் ஆண்டு ஒரே நாளில் 10 முதல் 15 சென்டிமீட்டர் மழை கொட்டி, சென்னை வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் அதேபோன்ற நிலை மீண்டும் வருமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

ஒரு பக்கம் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்தும், இன்னொரு பக்கம் வங்கக் கடலில் புயல் சின்னம் தோன்றியுள்ளதை அடுத்தும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

குறிப்பாக நேற்று ஒரே நாளில் பத்து சென்டிமீட்டர் மழை கொட்டியதாக தகவல் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி டிசம்பர் 2,3ஆம் தேதிகளில் மிக கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைதளத்தில் தற்போது பெய்த மழை 2015 ஆம் ஆண்டை நினைவுபடுத்துவதாக தெரிவித்துள்ளார்  கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி இதேபோல் 10 முதல் 15 செமீ மழை பெய்ததாகவும்,  அன்று ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் தற்போது சென்னையில் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் ஒரு சில நாட்கள் கனமழை பெய்தால் 2015 பெருவெள்ளம் மீண்டும் நிகழ வாய்ப்பிருப்பதாக   கூறப்படுகிறது.

Edited by Siva