வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழ்நாடு முழுவதும் தொடர் மழைக்கு வாய்ப்பு!
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தோன்றியுள்ளதை அடுத்து தமிழகம் முழுவதும் தொடர் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நவம்பர் 14ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று கூறப்பட்ட நிலையில் இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் இதனால் தமிழ்நாட்டில் நவம்பர் 14 முதல் சில நாட்கள் தொடர் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
.
குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. நவம்பர் 14ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பரவலாக தொடர் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.