ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 6 அக்டோபர் 2021 (07:28 IST)

8 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் இன்றும் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், தேனி, திண்டுக்கல் ஆகிய எட்டு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் அடுத்த பத்து நாட்களுக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்குவதால் தமிழகத்தில் மழை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது