Daily Horoscope
✕

இந்த ஆண்டு கனமழை தீபாவளி: மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டதால் பரபரப்பு!

Written By siva
Updated: வெள்ளி, 13 நவம்பர் 2020 (08:21 IST)
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பது தெரிந்ததே. இன்றும் கூட சென்னையில் உள்ள தி நகர், தேனாம்பேட்டை, எழும்பூர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் உள்பட பல பகுதிகளில் மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் வரும் 17ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக நவம்பம் 14 ஆம் தேதி தீபாவளி அன்று மிக கனமழை அல்லது மிக மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
 
தீபாவளி கொண்டாடுவதற்கான ஏராளமான பேர் சொந்த ஊர் சென்று இருக்கும் நிலையில் கனமழை காரணமாக தீபாவளி திருநாளை கொண்டாட முடியாத நிலை ஏற்படும் என்றும் இந்த தீபாவளி பொதுமக்களுக்கு கனமழை தீபாவளியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் தமிழக கடற்கரை பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

எல்லாம் காட்டு

விமான நிலையம் - கிளாம்பாக்கம் உள்பட 3 மெட்ரோ வேண்டும்: பிரதமரிடம் முதல்வர் விஜய் கோரிக்கை...

பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம்.. இம்ரான்கட்சியினரின் போராட்டம் வலுத்ததால் பரபரப்பு...

சிஜேபி போராட்டம்.. கைதுகள் கூடாது.. மெட்ரோ ரயில்களை நிறுத்த கூடாது.. மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..

சிஜேபி தலைவர் அபிஜித் பாட்டி மறைவு.. மனித நேயத்துடன் நடந்து கொண்ட டெல்லி போலீஸ்..

டாஸ்மாக் ஊழியர்களுக்க்கு ரூ.50 லட்சம் வரை காப்பீடு திட்டம்.. தமிழக அரசு தரும் தீபாவளி பரிசு...

அடுத்த கட்டுரையில்
Show comments