திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 17 டிசம்பர் 2023 (16:50 IST)

தூத்துக்குடியில் கனமழை, மோசமான வானிலை! – மதுரையில் நிறுத்தப்பட்ட விமானங்கள்!

Flight
தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.



தென் இலங்கை கடற்பகுதியை ஒட்டிய வங்க கடல் பகுதியில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்களான கன்னியாக்குமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முதலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதனால் பல குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ள நீர் புகுந்துள்ளது. பல பகுதிகளிலும் அணைகள் நிரம்பியுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் அடித்து செல்கிறது. கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி சென்ற இரண்டு விமானங்கள் மோசமான வானிலை காரணமாக மதுரை விமான நிலையத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளன. அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மேலும் சில விமானங்கள் ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K