நாளை 3 மாவட்டங்களில் அதிகனமழை: ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!
நாளை மூன்று மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை ஒரு பக்கம் தொடங்கும் நிலையில், இன்னொரு பக்கம் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மூன்று மாவட்டங்களில் நாளை, அக்டோபர் 15ஆம் தேதி, அதிக கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
ஏற்கனவே, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி பகுதிகளில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கிறோம் என்று தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva