செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 13 மார்ச் 2021 (16:17 IST)

கமல் தோளைத் தொட்டு கேள்வி கேட்ட யுடியூபர்! ரசிகர்கள் அதிருப்தி!

விருது விழா ஒன்றில் யுடியூபர் ஒருவர் கமலை அவமரியாதை செய்யும் விதமாக நடந்து கொண்டது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பிளாக் ஷீப் இணைய சேனல் நடத்திய பிரபல யுடியூபர்களுக்கான விருது விழா வழங்கும் நிகழ்வில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசினார். அப்போது கமலிடம் பிரபல யுடியூப் சேனலை நடத்தி வரும் மைக் செட் ஸ்ரீராம் கமலின் தோளை தொட்டு ‘நீங்கள் எவ்வளவோ பிரச்சனைகளைப் பற்றி பேசுகிறீர்கள்… அதே போல மொரட்டு சிங்கிள் பிரச்சனையை பற்றியும் பேசுங்கள்’ என ஏதோ தனது சக நண்பர்களோடு பேசுவது போல பேசியுள்ளாராம்.

இது கமல் ரசிகர்கள் மற்றும் பொதுவான ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம். மேலும் ஸ்ரீராமைக் கண்டிக்கும் விதமாக பதிவுகளும் வெளியாகி வருகின்றன.