செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 5 ஜூன் 2023 (11:24 IST)

அரிக்கொம்பன் யானையை கொண்டு செல்லும் கயிறு அவிழ்ந்ததால் பரபரப்பு..!

நீண்ட நாள் போராட்டத்திற்கு பின்பு தேனி மாவட்டத்தில் சுற்றி கொண்டிருந்த அரிக்கொம்பன் யானை இன்று வனத்துறையிடம் பிடிபட்ட நிலையில் அந்த யானை தகுந்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில் குன்னூர் சுங்கச்சாவடி அருகே அரிக்கொம்பன் யானையை கொண்டு செல்லும் வழியில் திடீரென யானையின் கால்களில் கட்டியிருந்த கயிறு அவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து வனத்துறை அதிகாரிகள் மீண்டும் யானையின் கால்களில் உள்ள கயிற்றை கட்ட முயற்சி செய்து வருகின்றனர். இதனால் அந்த சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கேரளாவை சேர்ந்த அரிக்கொம்பன் என்ற யானை விளைநிலங்களை சேதப்படுத்தி மனித உயிர்களையும் பலிகொண்ட நிலையில் கேரள வனத்துறையினர் அரிக்கொம்பன்  யானையை காட்டில் விட்டனர்.
 
இந்த நிலையில் அரிக்கொம்பன் யானை தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கடந்த சில நாட்களாக அட்டகாசம் செய்து வந்தது. இந்த நிலையில் இந்த யானையை பிடிப்பதற்காக தமிழக வனத்துறை அதிகாரிகள் தீவிர முயற்சி எடுத்து மூன்று கும்கி யானைகள் உதவியால் பிடித்தனர். 
 
தற்போது நான்கு மயக்க ஊசிகள் செலுத்தி அந்த யானை வேனில் கொண்டு செல்லப்பட்டபோதுதான் திடீரென கயிறு அவிழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran