விஜயேந்திரருக்கு முட்டுக்கொடுக்கும் எச்.ராஜா: வீடியோ வெளியீடு!
நேற்று மும்தினம் நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்தபோது காஞ்சி விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தார். ஆனால் தேசிய கீதத்தின் போது எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்.
இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்த சம்பவம் நடந்த மேடையில் எச்.ராஜாவும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினார். ஆனால் ஆண்டாள் விவகாரத்தில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த எச்.ராஜா இந்த விவகாரம் குறித்து பதிலளிக்காமல் இருந்து வந்தார்.
Without comment......1/2 pic.twitter.com/uyRdsLuhRK
— H Raja (@HRajaBJP) January 25, 2018
இதனால் எச்.ராஜாவின் இது தொடர்பான கருத்துக்கு பலரும் ஆர்வமுடன் காத்திருந்தனர். இந்நிலையில் தற்போது தனது டுவிட்டரில் இது தொடர்பாக ஒரு வீடியோவும், புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் திமுக தலைவர் கருணாநிதி தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது எழுந்திருக்காமல் அமர்ந்திருக்கிறார். மற்றொரு புகைப்படத்தில் அவர் எழுந்து நிற்கிறார்.
2/2 pic.twitter.com/rq72ItESNs
— H Raja (@HRajaBJP) January 25, 2018
இந்த கருத்தையும் சொல்லாமல் இதனை அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி வயது முதுமை, அவரால் எழும்பி நிற்க முடியாது அதனால் அமர்ந்திருக்கிறார். அவர் எழும்பி நிற்கும் புகைப்படம் வேறொரு நிகழ்வின் போது எடுக்கப்பட்டது. இரண்டும் வேறு வேறு நிகழ்வின் போது எடுக்கப்பட்டது. இதனை எச்.ராஜா பதிவேற்றி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
