1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 25 ஜனவரி 2018 (16:37 IST)

நிதியை வைத்தே அமைச்சருக்கு பதிலடி கொடுத்த உதயநிதி

உதயநிதி ஸ்டாலின் அரசியல் வருகை குறித்த அறிவிப்புக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமாருக்கு உதயநிதி பதிலடி கொடுத்துள்ளார்.

 
உதயநிதி ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன் தீவிர அரசியலில் களமிறங்க உள்ளதாக தெரிவித்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-
 
அரசியல் சமுத்திரம் மாதிரி யார் வேண்டுமானாலும் குதிக்கலாம். ஆனால் கரை சேருவதுதான் முக்கியம். உதயநிதி என்ன எத்தனை நிதி வந்தாலும் அவர்களை சமாளிக்கு திராணி எங்களுக்கு உண்டு என்று கூறியிருந்தார்.
 
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஜெயக்குமார் கூறிய கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-
 
தொண்டர்களுடன் பயணிப்பதே எனது அரசியல். எத்தனையோ நிதியை பார்த்துவிட்டோம் என கூறும் அமைச்சர் ஜெயக்குமார், ரூ.7 லட்சம் கோடி பற்றக்குறையை பார்க்கட்டும் என்று கூறியுள்ளார்.
 
உதயநிதி போக்குவரத்துறை உள்ள இழப்பீடு தொகையை குறிப்பிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.