1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 13 ஜூலை 2023 (10:20 IST)

திமுக வின் ஆட்டம் இன்னமும் 48 மணி நேரம்தான்.. பாஜக பிரமுகர் எச்.ராஜா ட்விட்..!

H Raja
திமுக ஆட்டம் இன்னும் 48 மணி நேரம் தான் என்றும் அதன் பிறகு தமிழக அரசின் கண்ணாமூச்சி ஆட்டம் முடிவுக்கு வரும் என்றும் ஆட்டம் முடிவுக்கு வருமா அல்லது ஆட்சியே முடிவுக்கு வருமா என்பதை பார்ப்போம் என்று பாஜக பிரமுகர் எச்.ராஜா  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 
 
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தற்போது மூன்றாவது நீதிபதியின் கீழ் நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்னும் ஒரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த தீர்ப்பை பொறுத்து தான் செந்தில் பாலாஜி வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கையை அமலாக்க துறையை எடுக்க உள்ளனர். இந்த நிலையில் பாஜக பிரமுகர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
திமுக வின் ஆட்டம் இன்னமும் 48 மணி நேரம்தான். செந்தில் பாலாஜி இருக்கிறாரா? இருந்தால் காவிரி மருத்துவ மணையில் தான் உள்ளாரா என்கின்ற பல சந்தேகங்கள் தீர்க்கப்படும் நேரம் நெருங்கி விட்டது. தமிழக அரசின் கண்ணாமூச்சி ஆட்டம் முடிவுக்கு வரும். ஆட்டம் முடிவிற்கு வருமா அல்லது ஆட்சியேவா?
 
Edited by Siva