திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By bala
Last Updated : திங்கள், 3 ஏப்ரல் 2017 (11:36 IST)

எச் ராஜாவிற்கு மணி கட்டுவது யாரு ?

பைபிளின் நீதி மொழிகள், அதிகாரம் 15 வசனம் 2.

ஞானிகளின் நாவு அறிவை உபயோப்படுத்தும்; மூடர்களின் நாவோ புத்தி ஈனத்தைக் காட்டும்.



அந்த பைபிளில் சொல்லப்பட்ட கொடியோன்/மூடன் நாக்கு நம் மரியாதைக்குரிய ராஜாவின் நாக்கு. அது தீய மந்திரங்கள் சொல்லும் கொடிய ஆயிரம் அகோரிகளின் நாவிற்கு சமம். எலும்பில்லாத அவர் நாக்கு அது விஷம் கட்க்கும் நாக்கு.

முன்பு ஒரு முறை தமிழர் தந்தையை பெரியாரை  செருப்பால் அடிப்பேன் என்றார். அப்போது நாம் அமைதியாக இருந்தோம். காரணம் இது நாம் பெரும் தன்மையானவர்கள். பின் ஒரு தருணத்தில் ஒரு அரசியல் தலைவர் வைகோவை மன நோயாளி என்றார். அப்போதும் அவரை விட்டு விட்டோம்.

பின்பு தேச துரோகிகள், தேச விரோதிகள் என வாய் ஜாலம் பேசினார். அப்போதும் சட்டம் அவர் முன்பு கை கட்டி நின்றது. அவரின் மன முதிர்ச்சி என்பது தேச துரோகி என்ற வட்டத்துடன் முடிந்து விடும். கொள்கைகைகளை கொள்கைகளால் எதிர் கொள்ளாமல், சித்தாந்தகளை சித்தாந்தங்களால் எதிர் கொள்ளாமல், பேடை போல தேச துரோகி என்று பதில் சொல்கிறார் இந்த ராஜா.

இப்போது வெள்ளை தோல்காரி என ஒரு பெண் தலைவரை (சோனியா காந்தியை) விமர்சிக்கிறார். பெண்களைப் பற்றிய அவரது அதே ஒப்பீட்டை வேறு யாரேனும் நம் பெரும் மதிப்பிற்குரிய சகோதரிகள் தமிழிசை மீதும், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீதும் வைத்தால் ராஜா என்ன செய்வாராம் ? இந்த விஷயத்தில், ராஜா அவர்களின் அளவுக்கு என்னும் யாரும் தரம் தாழவில்லை என்று நினைக்கிறேன். மாதர் சங்கங்கள் எல்லாம் தங்கள் காதுகளில் பஞ்சை வைத்து அடைத்து கொண்டன. சிம்புவும், அனிருத்தும்  மீண்டும் பீம் சாங் போட்ட பிறகு தான் போராட வருவார்கள் போலும்.

இது டிஜிட்டல் காலம். ராஜாவின் காலம் அல்ல , தமிழகத்தில் சாத்விகள் ஆட்சி செய்கிறார்களா என்ன ? என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பதற்கு, அவரின் அதன் தொடர்ச்சியாக டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு முசுலீம்கள், கிருத்துவர்கள் பண உதவி செய்கிறார்கள் என்று பேசுகிறார் ஒருவர். இன்னும் சில நாட்கள் இவரை பேச விட்டால் அனைவரையும் தேச துரோகி ஆக்கி விடுவார்.

ராஜா தமிழகத்தில் தான் இருக்கிறாரா என ஐயம் வருகிறது. ராஜாவிற்கு முக்காணங் கயிறு தேவைப்படுகிறது.  ஆனால் அதை கட்டுவது யார் ?  எப்போது கட்டுவது என்பது தான் கேள்வி குறி. ஆனால் முக்கான கயிறு கட்டுவதில்  அனைவர்க்கும் பங்கு உண்டு.

இறுதியாக மரியாதைக்குரிய ராஜா அவர்களே ! பிரதமர் ஒன்றும் விமர்சனங்களுக்கும், சந்தேகங்களுக்கும், விவாதங்களுக்கும், அப்பாற்பட்டவாரா என்ன ?  தேசத்தின் பிரதமர் ஒன்றும் ஸ்ரீ ராமனின் தர்ம பத்தினி அல்லவே? பிரதமரை  தமிழக ஊடகங்கள் யாவும்  காழ்புணர்ச்சியால் விமர்ச்சிக்கவில்லை. விமர்சனங்களை விமர்சனங்களால் எதிர் கொள்ளுங்கள், ஏன் எனில் இது தமிழகம், நாங்கள் தமிழர்கள். இடியட்கள் அல்ல


இரா .காஜா பந்தா நவாஸ் ,
பேராசிரியர் 
[email protected]