1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 19 ஜூலை 2022 (18:49 IST)

சவுக்கு சங்கர் ஒரு டேட்டா திருடன்: எச்.ராஜா கடும் விமர்சனம்!

H Raja
சவுக்கு சங்கர் ஒரு டேட்டா திருடன் என பிரபல பத்திரிக்கையாளரும் அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கரை எச்.ராஜா கடுமையாக தனது டுவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார். 
 
பத்திரிகையாளர் மற்றும் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர நீதிபதி ஜிஆர் வைத்தியநாதன் அவர்கள் உத்தரவிட்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் சவுக்கு சங்கர் குறித்த செய்திகள் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் சவுக்கு சங்கர் ஒரு டேட்டா திருடன் என்று எச்.ராஜா தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் மேலும் கூறியதாவது:
 
இந்த டேட்டா திருடன், விசாகா கமிட்டி முன்பு பாலியல் குற்றச்சாட்டு எதிர கொண்டு வருபவன் ஆதாரமின்றி அனைவரையும் விமரிசிப்பவன் எனது பெயரின் முதல் எழுத்தை இழிவாக எழுதுபவன் என்று பல குற்றச்சாட்டுகள் உண்டு