புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 28 ஜனவரி 2021 (12:20 IST)

ஸ்டாலினுக்கு ஒரு சீட் கிடைச்சாலும் காவடி தூக்குறதுல நோ யூஸ்! – எச்.ராஜா தாக்கு!

தமிழக சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலினுக்கு ஒரு சீட் கூட கிடைக்க கூடாது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் மு.க.ஸ்டாலின் கையில் வேல் ஏந்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மு.க.ஸ்டாலின் அரசியல் ஆதாயத்திற்காக வேலை ஏந்துகிறார் என பாஜகவினர் சாடி வந்தனர்.

இந்நிலையில் இன்று தைப்பூச திருவிழா தமிழகமெங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தைப்பூசத்திற்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ள பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா “வருகிற சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு சீட் கூட கிடைக்கக் கூடாது, அப்படி கிடைத்தால் நாம் தைப்பூசத்திற்கு காவடி எடுப்பதிலும், திருநீறு பூசுவதிலும் அர்த்தமில்லை!” என தெரிவித்துள்ளார்.