புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (14:38 IST)

வைரமுத்துவை கண்டுக்கல.. கல்யாணராமனுக்கு கைதா? – எச்.ராஜா ஆவேசம்!

இஸ்லாமிய இறைதூதர் முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாஜக கல்யாணராமன் கைது செய்யப்பட்டதற்கு எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மேட்டுப்பாளையத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் என்பவர் இஸ்லாமிய இறைதூதரான முகமதுநபி குறித்து பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் கல்யாணசுந்தரம் மற்றும் இரு பாஜகவினரை கைது செய்து அவிநாசி கிளை சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கல்யாணசுந்தரம் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா “ஆண்டாள் நாச்சியார் இழிவாகப் பேசி, எம்பெருமான் ராமனை மனநோயாளி என்று பேசிய இந்து விரோத வைரமுத்து கைது செய்யப்படாத சூழ்நிலையில் கல்யாணராமனை சிறையிலடைப்பது பாரபட்சமானது. கண்டிக்கதக்கது.” என முதல்வர் எடப்பாடி பழனிசாமியை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.