செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (14:19 IST)

இந்து விரோத திமுக: சீண்டலை ஆரம்பித்த எச் ராஜா!

கு.க.செல்வம் மீது நடவடிக்கை எடுத்து திமுக இந்து விரோத கட்சியே என பதிவிட்டுள்ளார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா. 
 
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள நிலையில் திமுக பிரமுகர்கள் திமுகவை விட்டு விலகி பாஜகவில் இணைந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் திமுகவில் குடும்ப அரசியல் அதிகரித்து விட்டதாக கு.க.செல்வம் கூறியுள்ளது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
திமுகவில் திறமையானவர்களுக்கு மதிப்பில்லை என்ற பேச்சு எழுந்துள்ளதாக கட்சி உள் வட்டாரத்தில் சலசலப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள எச்.ராஜா “ஆயிரம் விளக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. கு.க. செல்வம் அவர்களின் கருத்து தமிழக மக்கள் எண்ணத்தை பிரதிபலிப்பதாக உள்ளது. அவரை இடைநீக்கம் செய்த திமுக கோட்டையில் குத்து வெட்டு துவக்கம். நல்லது இன்றே துவங்குவது சிறப்பு என்று பதிவிட்டுள்ளார்.
 
இதனைத்தொடர்ந்து,  இந்து விரோத திமுக: இந்து மதத்தை இழிவாகப் பேசிய ஆ.ராசா மீதோ அல்லது அக்கினி தெய்வம் திரௌபதியை இழிவாகப் பேசிய பழ.கருப்பையா மீதோ நடவடிக்கை எடுக்காமல், தமிழக மக்களின் எண்ணங்களை பிரதிபலித்த கு.க.செல்வம் மீது நடவடிக்கை எடுத்து திமுக இந்து விரோத கட்சியே என பதிவிட்டு திமுகவை சீண்டியுள்ளார்.