1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 10 நவம்பர் 2022 (11:36 IST)

எச்.ராஜா கவர்னர் ஆகிறாரா? எந்த மாநிலத்திற்கு?

H Raja
தமிழக பாஜக பிரமுகர்களான தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் இல கணேசன் ஆகியோர் ஏற்கனவே கவர்னர்களாக இருக்கும் நிலையில் தற்போது எச் ராஜா மற்றும் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கவர்னராக போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னராக உள்ளார். அதேபோல் தமிழக பாஜக பிரபலம் இல கணேசன் மணிப்பூர் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் கவர்னராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது எச் ராஜா மற்றும் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் கவர்னராக போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இருவருமே தென் மாநிலங்களுக்கு தான் கவர்னராக நியமிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
ஒருவேளை எச் ராஜா தமிழகத்தின் கவர்னராக நியமிக்கப்பட்டால் என்ன நடக்கும் என்பதை கற்பனை செய்யவே அதிர்ச்சியாக உள்ளது என அரசியல் கட்சி தலைவர்கள் கூறிவருகின்றனர்
 
Edited by Siva